பொது செய்தி

இந்தியா

கடற்கரை சாலையில் முப்பெரும் விழா: கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலையில், முப்பெரும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத் துறையும், தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து, திருவள்ளுவர் விழா, சிறுவர் - சிறுமியர் இசை விழா, நாட்டிய விழா ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்துள்ளன.கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில், வரும் 16ம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு, முப்பெரும் விழாக்களை, முதல்வர் நாராயணசாமி துவக்கி வைக்கிறார்.அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.திருவள்ளுவர் விழாவில் நாட்டுப்புற இசை, சேர்ந்திசை, தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்துரை, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து, வரும் 17, 18ம் தேதிகளில் மாலை 6:30 மணியளவில், சிறுவர் - சிறுமியர் இசை விழா, நாட்டிய விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு எதிரில் நடக்கும் இந்த விழாக்களில் வாய்ப்பாட்டு, கருவி இசை, கர்நாடக இசை, தாள வாத்தியம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளும், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.மூன்று நாட்கள் நடக்க உள்ள முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை, கலை பண்பாட்டுத் துறையின் இயக்குனர் முகமது மன்சூர், தென்னகப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் பாலசுப்ரமணியன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X