பொது செய்தி

இந்தியா

பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 12, 2020
Advertisement
 பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் விழா

வில்லியனுார்:ஊசுடு பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் பாரத் கல்விக்குழுமம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவை, பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 21 பானைகளில் பொங்கல் வைத்து, மாணவர்கள் பொங்கலோ பொங்க என, குலவையிட்டு உற்சாகமாக விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.
தவம் பவுண்டேஷன் சார்பில் தாரை தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட தமிழர் பெருமை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆசிரியர்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களால் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.மக்கள் தொடர்பு அலுவலர் செல்வம் வரவேற்றார். நிர்வாக அலுவலர் பாஸ்கர், முதுநிலை முதல்வர் மணி விஜயராகவன், பள்ளி முதல்வர் பியுபண்டோ பாத்யாய் கலந்து கொண்டனர். ஊசுடு லட்சுமிநாராயணா மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலகுருநாதன், மணி வீரராகவன், முத்துவேல், அமிர்பாட்சா ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி மனித வள மேலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X