இந்தியா

வில்லியனுாரில் முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் பராமரிப்பால் போக்குவரத்து பாதிப்பு!

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Advertisement
வில்லியனுாரில் முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் பராமரிப்பால்  போக்குவரத்து  பாதிப்பு!

வில்லியனூர்:வில்லியனுாரில் முன்னறிவிப்பு இன்றி ரயில்வே கேட் பராமரிப்பு பணி மேற்கொண்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதியுற்றனர்.
வில்லியனுார் அடுத்த அரும்பார்த்தபுரத்தில் ரயில்வே மேம்பால பணி நடப்பதால் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் மூலகுளம், பிச்சவீரன்பேட், கோபாலன்கடை, பெரம்பை வழியாக விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், விழுப்புரம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் வில்லியனூர்-கூடப்பாக்கம் சாலை, ஊசுட்டேரி, மேட்டுப்பாளையம் வழியாக புதுச்சேரிக்கும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் கூடப்பாக்கம் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பராபரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி அதிகாலையில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், நேற்று பகல் 12:00 மணி வரை நடந்தது.
இப்பணியால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி சென்ற வாகனங்கள் மற்றும் கூடப்பாக்கம் சாலை வழியாக வில்லியனூர் சென்ற வாகனங்கள் அனைத்தும் பெரம்பை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் 4 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் மாற்றிவிடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். முன் அறிவுப்பின்றி இப்பணி நடந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X