பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் விழா

Added : ஜன 12, 2020
Advertisement
பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் விழா

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சென்னை,நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பாரம்பரிய கலைகளுடன் பொங்கல் விழா களைகட்டியது.

சென்னை, எண்ணுார், நெட்டுக்குப்பம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 110 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு, பொங்கல் விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் புது முயற்சியாக, நவீன காலத்தில், நாகரிக மாற்றத்தில், மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளான, பம்பரம், கோலி, கில்லி, பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி, பாண்டி, பச்சை குதிரை உள்ளிட்ட பல விளையாட்டுகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தினர்.

பள்ளி வளாகத்தில், மாணவர்களால் உருவாக்கப்பட்ட குடிசை வீட்டின் முன், சேலை கட்டிய மாணவியர், புதுப்பானையில் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது, குலவை சத்தமிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அதைத் தொடர்ந்து, பல வண்ண ரேஷன் சேலைகளை அணிந்து, மயில் போல்துள்ளிக் குதித்து, ஒயிலாட்டம் ஆடிய மாணவியரால், வளாகமே வண்ண மயமாக காட்சியளித்தது. குனிந்து, நெளிந்து கும்மியாடிய மாணவியரின், கை தாளத்திற்கு ஏற்றாற் போல், கூடியிருந்த பெற்றோரும், பொதுமக்களும் கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.

பெரியவர்களே ஆட யோசிக்கும் நெடுங்குச்சி ஆட்டத்தை, அரை மணி நேரம் ஆடி, வெளுத்து வாங்கிய சிறுமியரின் திறமையை பார்த்து, பார்வையாளர்கள் பிரமித்தனர்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, நெட்டுக்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர், கண்கவர் பாரம்பரிய பொங்கல் விழா நடத்தியது, நல்ல வரவேற்பை பெற்றது.தவிர, மாணவர்கள், பெற்றோருக்கு பல போட்டிகள் வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், தலைமை ஆசிரியர் லெஸ்லி, ஆசிரியர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், ஊர் நிர்வாகிகள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X