கார்-லாரி மோதி கவிழ்ந்து விபத்து 3 பேர் காயம்; போக்குவரத்து பாதிப்பு

Added : ஜன 12, 2020
Advertisement
 கார்-லாரி மோதி கவிழ்ந்து விபத்து 3 பேர் காயம்; போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி:கிருமாம்பாக்கம் அருகே, காரும் டிப்பர் லாரியும் மோதி கவிழ்ந்ததில், மூவர் காயமடைந்தனர். விபத்தால் கடலுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலுார், செம்மண்டலத்தை சேர்ந்தவர் அசோக், 46; இவர், நேற்று மாலை, டி.என்.31.பி.டி.6879 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில், திருவக்கரையில் இருந்து கருங்கல் ஏற்றிக் கொண்டு புதுச்சேரி வழியாக பெண்ணாடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார்.மாலை 6:00 மணிக்கு கிருமாம்பாக்கம், கந்தன்பேட் அருகே சென்ற போது, டிப்பர் லாரியின் பின்னால் கடலுார் நோக்கி சென்ற கே.எல்.20.என்.4006 பதிவெண் கொண்ட ஹோண்டா சிட்டி கார் லாரியை இடது புறமாக முந்தி சென்று திடீரென பிரேக் போட்டதால், காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. அதில் கார், சாலை தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. லாரியும் சடன் பிரேக் போட்டதில் இடதுபுறமாக கவிழ்ந்தது.
கார் இடிபாட்டில் சிக்கிய கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தேவன்நாயர்,44; ஷோபனகுமாரி மற்றும் லாரி டிரைவர் அசோக் ஆகியோர் லேசான காயங்களுடன் மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கார் மற்றும் லாரி சாலையில் கவிழ்ந்ததால், கடலுார்-புதுச்சேரி போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் கவிழ்ந்த லாரி மற்றும் காரை கிரேன் உதவியுடன் இரவு 7:00 மணிக்கு அப்புறப்படுத்தினர். அதன்பிறகே கடலுார்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X