மைனர் பெண்ணுக்கு திருமணம் 5 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

Added : ஜன 12, 2020
Advertisement

புதுச்சேரி:மைனர் பெண்ணை திருமணம் செய்து, வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
புதுச்சேரி, வேல்ராம்பட்டை சேர்ந்தவர் நரேந்திரன்,28; பெயிண்டர். இவருக்கும், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த 2019 ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன்பிறகு, நரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணிற்கு 17 வயதில் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கணவர் நரேந்திரன், மாமனார், மாமியார், மைத்துனர் மற்றும் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பெண்ணின் தந்தை ஆகிய 5 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X