பொது செய்தி

தமிழ்நாடு

குமராட்சி ஒன்றிய சேர்மன் தேர்தல் எம்.எல்.ஏ., மனைவி பூங்குழலி வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement
 குமராட்சி ஒன்றிய சேர்மன் தேர்தல் எம்.எல்.ஏ., மனைவி பூங்குழலி வெற்றி

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் மனைவி பூங்குழலி (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார்.
குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., பாண்டியன் மனைவி பூங்குழலியும், தி.மு.க., சார்பில் முன்னாள் ஒன்றிய சேர்மன் மாமல்லன் மனைவி முத்துலட்சுமியும் போட்டியிட்டனர்.தேர்தல் அலுவலர் கற்பகம் தலைமை தாங்கினார். 19 கவுன்சிலர்ளும் ஓட்டளித்தனர்.இதில், அ.தி.மு.க., பூங்குழலி 13 ஓட்டுக்களும், தி.மு.க., முத்துலட்சுமி 6 ஓட்டுக்களும் பெற்றனர். அதில் அ.தி.மு.க., 7, பா.ம.க., 2, தே.மு.தி.க., 2, சுயேட்சை.,2 என 13 ஓட்டுக்கள் பூங்குழலிக்கு கிடைத்தன. தி.மு.க., வின் 6 கவுன்சிலர்களும் முத்துலட்சுமிக்கு ஓட்டளித்தனர். பூங்குழலி குமராட்சி ஒன்றிய சேர்மனாக பொறுப்பேற்றார். புதிய சேர்மனுக்கு எம்.எல்.ஏ., பாண்டியன், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, கவன்சிலர்கள், அ.தி.மு.க., வினர் அரிசக்தி, குமார், செல்வம், சுவாமிநாதன் மற்றும் சண்முகசுந்தரம், பிரகாஷ் வாழ்த்து தெரிவித்தனர்.குமராட்சி ஒன்றிய துணை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ேஹமலதா வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X