பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் அ.தி.மு.க., பா.ம.க., வேட்பாளர்கள் வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

புவனகிரி:மேல்புவனகிரி ஒன்றியத்தில் ஒன்றிய சேர்மன் பதவியை அ.தி.மு.க., வும், கீரப்பாளையத்தில் சேர்மன் பதவியை பா.ம.க., வும் கைப்பற்றி உள்ளன.
மேல்புவனகிரி ஒன்றியத்தில், நேற்று காலை தலைவருக்கான தேர்தல், காலை 11.00 மணிக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி இந்திராதேவி, ஒன்றிய ஆணையாளர் மோகன்ராஜ் முன்னிலையில் நடந்தது. அ.தி.மு.க., வின் ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், தி.மு.க., வில் செல்வராஜ் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து பகல் 12.30 மணி வரை முடிவு அறிவிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களை தேர்தல் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.அதன் பின் ஆணையாளர் மோகன்ராஜ் பத்திரிகையாளர்களை அழைத்துச்சென்று தேர்தல் முடிவுகளை அறிவித்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் சிவப்பிரகாசம் 9 ஓட்டுகளும், தி.மு.க., செல்வராஜ் 5 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.கீரப்பாளையம் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார், ஆணையாளர் பாலக்கிருஷ்ணன் முன்னிலையில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், தி.மு.க, கூட்டணியில் வி.சி.க., சார்பில் இந்திரா போட்டியிட்டனர். மொத்தமுள்ள 13 ஓட்டுகளில், கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திரா 4 ஓட்டுகள் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X