பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாவது முறையாக அ.தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

பண்ருட்டி:அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில், ஒன்றிய குழு தலைவராக ஜானகிராமன் தேர்வு செய்யப்பட்டார்.
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நேற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அறையில் நடந்தது. தேர்தல் அலுவலர் ஜெயக்குமார்தேர்தலை நடத்தினார். பி.டி.ஓ., க்கள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க. சார்பில் ஜானகிராமனும், சுயேச்சை வேட்பாளர் சண்முகம் ஆகியோர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட மனு செய்தனர். இதனையடுத்து நடந்த ஓட்டுப்பதிவில் அ.தி.மு.க., வை சேர்ந்த ஜானகிராமன் 14 ஓட்டுக்கள் பெற்று ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சண்முகம் 8 ஓட்டுக்கள் பெற்றார்.
மாலையில் நடந்த ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தலில் தே.மு.தி.க., ஜான்சிராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.5 வது முறையாக அ.தி.மு.க., வெற்றிகடந்த 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாகிராமம் ஒன்றிய குழு தலைவராக ஜானகிராமன் தேர்வு செய்யப்பட்டனர்.தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய தேர்தலிலும், தற்போது முடிந்த தேர்தலிலும் அ.தி.மு.க., 5 வது முறையாக ஒன்றிய குழு தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X