பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாக்க திட்ட அலுவலகம் திறப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

சிவகங்கை:தமிழகத்தில் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க 3 ஆயிரத்து 994 கிராம ஊராட்சிகளில் தொழில் முனைவு திட்டத்திற்கு அரசு 918.20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழில் நிறுவனம் அமைத்தல், மேம்படுத்துதல், ஊரக தொழில் முனைவுக்கான திட்ட நிதி வழங்கல், வேலைவாய்ப்பு தரும் தொழில் பயிற்சி அளித்தல் போன்ற திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில், 120 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 994 கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு 918. 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டம் காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள 124 கிராம ஊராட்சிகளில் செயல்படுகிறது. இக்கிராமங்களில் உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருள், விவசாய பொருட்கள், சேவை மையங்களை கண்டறிந்து அதற்கேற்ற தொழில் பயிற்சி வழங்குவதாகும்.

இத்திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சிவகங்கை அருகே காமராஜர் நகரில் மாவட்ட திட்ட அலுவலகத்தை சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி திறந்து வைத்தார். ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X