பொது செய்தி

தமிழ்நாடு

சேர்மன், துணை சேர்மன் விருதையில் போட்டியின்றி தேர்வு

Added : ஜன 12, 2020
Advertisement
 சேர்மன், துணை சேர்மன்  விருதையில் போட்டியின்றி தேர்வு

விருத்தாசலம்:விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அ.தி.மு.க., செல்லதுரையும், துணை சேர்மனாக பா.ம.க., பூங்கோதையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில், அ.தி.மு.க., 5 வார்டுகளிலும், பா.ம.க., 4, தே.மு.தி.க., - பா.ஜ., தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. தி.மு.க., மற்றும் சுயேச்சைகள் தலா 4 வார்டுகளில் வென்றனர்.சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல், விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டரங்கில், பகல் 11:00 மணியளவில், நடந்தது. நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) ஜோதி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமாரி, சுந்தரம், துணை பி.டி.ஓ., சிவா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் செல்லதுரை சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.பிற்பகல் 3:30 மணியளவில் நடந்த துணை சேர்மனுக்கான தேர்தலில், 14வது வார்டு பா.ம.க., கவுன்சிலர் பூங்கோதை கொளஞ்சி போட்டியின்றி தேர்வானார்.
அதை தொடர்ந்து, மாலையில் சேர்மன் செல்லதுரை, துணை சேர்மன் பூங்கோதை இருவரும் சேர்மன் அறையில் அமர்ந்து, பொறுப்பேற்றுக் கொண்டனர்.அ.தி.மு.க., நிர்வாகிகள் பாஸ்கரன், செல்வராஜ், பாலதண்டாயுதம், பா.ம.க., கார்த்திகேயன், சுரேஷ், பா.ஜ., மணிகண்டன், தே.மு.தி.க., செம்பை உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ஒன்றிய சேர்மன் செல்லதுரை, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X