பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துார் ஒன்றியத்தில் தி.மு.க., வெற்றி

Added : ஜன 12, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமு.க.,வைச் சேர்ந்த சோ.சண்முகவடிவேலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தி.மு.க., 9,காங்.,1, அ.தி.மு.க., 2 சுயேச்சை 1 உட்பட 13 கவுன்சிலர்கள் வந்திருந்தனர். தேர்தல் அலுவலர் விஜயநாதன் காலை 11:00 மணிக்கு தேர்தலை அறிவித்தார்.தி.மு.க..,வைச் சேர்ந்த 11 வது வார்டு கவுன்சிலர் சோ.சண்முகவடிவேலு தலைவருக்கான வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.வேறுயாரும் மனுச் செய்யாததால் ஒன்றிய தலைவராக சோ.சண்முகவடிவேலு தேர்ந்தெடுக்கப்பட்டார்.பி.டி.ஓ.,க்கள் ஜெயராமன், சுமதி, டி.பி.டி.ஓ.,செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

2006 தேர்தலுக்குப் பின் மீண்டும் தி.மு.க., தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.மாலை 3:30 மணிக்கு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., 2, சுயே 1 உள்ளிட்ட 3 ஒன்றிய கவுன்சிலர்கள் வரவில்லை. தி.மு.க., 9, காங்.,1 கவுன்சிலர்கள் மட்டும்பங்கேற்றனர். தி.மு.க.,10 வார்டு கவுன்சிலர் மீனாள் துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தேர்தல் அலுவலர் விஜயநாதன் துணைத் தலைவராகமீனாள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X