காங்.,கூட்டணியால் பதவியை இழந்த தி.மு.க.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காங்.,கூட்டணியால் பதவியை இழந்த தி.மு.க.,

Added : ஜன 12, 2020
 காங்.,கூட்டணியால் பதவியை இழந்த தி.மு.க.,

காரைக்குடி:சாக்கோட்டை ஒன்றியத்தில் நடந்த ஒன்றிய தலைவர் போட்டியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது,சாக்கோட்டை ஒன்றியத்தில் 11 கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவர் பதவி பெண் பொதுவிற்கு ஒதுக்கப்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., 8 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், வி.சி.க., ஒரு இடத்திலும் போட்டியிட்டது. இதில், 8 வது வார்டுக்கு காங்., கட்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சீட் கேட்டபோது கட்சி வழங்க மறுத்தது. 8 வது வார்டு, விசி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்த போது அவருக்கு கடைசி நேரத்தில் கை சின்னம் ஒதுக்கப்பட்டது.

மொத்தமுள்ள 11 வார்டுகளில்,தி.மு.க.,3, காங்.,2, அ.தி.மு.க.5,இடங்களை பிடித்தது. இதில்,8 வது வார்டில், கை சின்னத்தில் போட்டியிட்ட கார்த்திக்கும் வெற்றி பெற்றார்.தனக்கு சீட் வழங்க மறுத்த காங்., தி.மு.க., கூட்டணிக்கு மறைமுக தேர்தலில் ஆதரவு அளிக்காமல் கடைசிவரை இழுத்தடிப்பு செய்தார். அ.தி.மு.க., கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாக தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் தலைவர் தேர்விற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன், கார்த்திக்கும் வந்து வரிசையில் அமர்ந்திருந்தார். தி.மு.க., கூட்டணியில், 7 வது வார்டில் வெற்றி பெற்ற ரேவதியும், அ.தி.மு.க., வில் 9 வது வார்டில் வெற்றி பெற்ற சரண்யாவும் தலைவருக்கு போட்டியிட்டனர். 11 ஓட்டுக்களில், ரேவதி 5 ஓட்டுக்களே பெற்றார்.6 ஓட்டுக்கள் பெற்ற 27 வயது ஆன சரண்யா சாக்கோட்டை ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சியான காங்.,கிரசில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்த ஒன்றியத்தை தி.மு.க., இழந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X