வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

Added : ஜன 12, 2020
Share
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம்,
 வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மகா அபிஷேகம் நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து வசந்த மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஷோடசோபவுபசார தீபாராதனை, சுவாமி புறப்பாடு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து 11:30 மணிக்கு கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X