தமிழ்நாடு

அவசியமாகுது நடவடிக்கை நகர் பகுதிகளை ஒருங்கிணைத்து சர்குலர் பஸ் 5 கி.மீ.,க்கு இரு பஸ்களில் பயணிக்கும் மக்கள்

Added : ஜன 12, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:நகரின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் சென்றுவர சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரங்களும், கிராமங்களும் இணையுமளவிற்கு வீடுகள் நெருக்கமாகி வருகிறது. வீடுகள் அதிகரிக்கும்பகுதிகளில் போதிய பஸ் வசதியில்லாத நிலை காணப்படுகிறது.இதனால் டூவீலர்கள் எண்ணிக்கை அதிகரித்து விபத்துகளும், போக்குவரத்து நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது.

அதிலும் நகரங்களிலுள்ள மருத்துவமனை, வங்கிகள், கோயில்கள், போஸ்ட் ஆபிஸ், ரயில்வே ஸ்டேஷன், நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகம் , பள்ளி மற்றும் கல்லுாரிகள், காய்கறி மார்கெட்டுகள் குறிப்பிட்ட துாரத்திற்குள் அமைந்திருந்தாலும் அப்பகுதிகளுக்கு செல்ல போதிய அளவிற்கு பஸ்வசதி இல்லை. 5 கி.மீ., துாரத்திற்குள் செல்ல இரு பஸ்கள் மாறவேண்டியநிலை உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிலிருந்து மடவார்வளாகம் கோயில் செல்லவும், இந்திராநகரிலிருந்து நீதிமன்றம் செல்லவும் 2 பஸ்கள் மாறி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.ராஜபாளையத்தில் சொக்கர் கோயிலிருந்து பஞ்சு மார்கெட்வரவும், சிவகாசியில் ரிசர்வ் லயனிலிருந்து சித்துராஜபுரம் செல்லவும், சாத்துாரில் அரசுபஸ் டிப்போவிலிருந்து படந்தால் ரோடு செல்லவும், விருதுநகரில் கலெக்டர் ஆபிசில் இருந்து பாண்டியன்நகர் செல்லவும் துாரம் குறைவாக இருந்தும், 2 பஸ்கள் மாறும்நிலை நீடிக்கிறது.

இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம், நேரம் விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு நகரிலும் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கவேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், அரசு போக்குவரத்து கழகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இன்றைய தினம் வேலைவாய்ப்பிற்காக பலரும் வெளியூர் பயணம் மேற்கொள்கின்றனர். உள்ளூர் மக்களும் நகரங்களுக்குள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 2 பஸ்கள் மாறி பயணிக்கும் நிலை உள்ளது. நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் எளிதில் சென்று வருவதற்கு சர்குலர் பஸ்கள் இயக்கவேண்டும். காலத்திற்கு தகுந்த மாற்றங்களையும், வசதிகளையும் அரசு செய்துதரவேண்டும்.
-தேன்கனி, ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X