பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை தேவை

Added : ஜன 12, 2020
Advertisement
 சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை தேவை

திருவெண்ணெய்நல்லுார்:பேரங்கியூர் தென்பெண்னை ஆற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் தென்பெண்னை ஆற்றில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு தை மாத தீர்த்தவாரி திருவிழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் திருவெண்ணெய்நல்லுார், பரிக்கல் உட்பட பல்வேறு கோவில்களைச் சேர்ந்த உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றுக்கு கொண்டு வருவர்.அங்கு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.
பேரங்கியூர் தென்பெண்னை ஆற்றில் திருவிழா நடைபெறும் இடம் முழுவதும் தற்போது சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.இதனால் ஆற்றுக்குள் உற்சவர் சுவாமிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருவிழாவிற்கு, தென்பெண்னை ஆற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X