பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவிலான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Added : ஜன 12, 2020
Advertisement
 தேசிய அளவிலான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

உளுந்துார்பேட்டை:தேசிய அளவிலான ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்த பு.கொணலவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகளை டி.இ.ஓ., பாராட்டினார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கடந்த நவம்பர் 5ம் தேதி நடந்தது. மாநாட்டில் என்றும் இளமை என்றும் பசுமை என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை போட்டி நடந்தது.போட்டியில் உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிகள் பிரியதர்ஷினி, முத்துலட்சுமி பங்கேற்று, இரு மாணவிகளும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.கடந்த 16ம் தேதி வேலுாரில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று இறுதியாக தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தேசிய அளவிலான போட்டி கடந்த 27 முதல் 31ம் தேதி வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. போட்டியில் பிரியதர்ஷினி, முத்துலட்சுமியும் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.சாதனை படைத்த மாணவிகளை உளுந்துார்பேட்டை கல்வி மாவட்ட அதிகாரி மணிமொழி, ஏ.இ.ஓ., மோகன்சுந்தர்ராஜன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X