பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தூரில் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேற்றம்

Added : ஜன 12, 2020
Advertisement

சாத்துார்:சாத்துார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தி.மு.க., கவுன்சிலர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

சாத்துார் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்காக அலுவலர் காளிமுத்து முன்னிலையில் கவுன்சிலர்கள் 16 பேர் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கூடினர். தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்பவர்கள் மனு அளிக்க அலுவலர் கூறினார். அப்போது அ.தி.மு.க., கவுன்சிலர் வசந்தா, ''தி.மு.க., கவுன்சிலர்கள் கண்ணாயிரம், சந்திரா ஆகியோர் கண் ஜாடை செய்து கொள்வதாகவும் பணத்தை வாங்கி கொண்டு மாற்றி ஓட்டு போட தீர்மானித்து விட்டீர்களா,'' என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடக்க தேர்தல் அலுவலர் ''அரை மணி நேரத்திற்கு தேர்தலை ஒத்தி வைப்பதாக'' அறிவித்தார். அரை மணி நேரம் பின் மீண்டும் தேர்தல் நடவடிக்கை தொடங்கியது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள்6 பேர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

தி.மு.க., கவுன்சிலர்கள் தேர்தலை இன்றே நடத்த வேண்டும் என கூறி கூட்டரங்கில் அமர்ந்து இருந்தனர். டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அவர்களை வெளியேற்றினர். தி.மு.க.,. கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தி.மு.க., மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் கூறியதாவது : அமைச்சரும், 2 அ.தி.மு.க., எம்.எல்.ஏ..க்கள், தேர்தல் அலுவலர்கள், போலீசார் இணைந்து தி.மு.க., வென்ற இடங்களில் குழப்பம் விளைவித்து தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும், என்றார். இவ்ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் அ.தி.மு.க.,5 ,பா.ஜ.,1 தி.மு.க., 8, ம.தி.மு.க., 2 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X