பொது செய்தி

தமிழ்நாடு

மனைவி தலைவர், கணவர் துணைத்தலைவர் ஆம்புலன்சில் வந்து ஓட்டளித்த கவுன்சிலர்

Added : ஜன 12, 2020
Advertisement

சிவகாசி:சிவகாசி ஒன்றிய தலைவர் தேர்தலில் தி.மு.க., வை சேர்ந்த முத்துலட்சுமி தலைவராகவும் இவரது கணவர் விவேகன் ராஜ் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தேர்தலில் ஓட்டளிக்க தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆம்புலன்சில் வந்தார்.தேர்தலை சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் நடத்தினார். தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வில் நாரணம்மாள், தி.மு.க., வில் முத்துலட்சுமி போட்டியிட்டனர். முத்துலட்சுமி 21 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். துணை த்தலைவர் தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த விவேகன்ராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தலைவர், துணைத் தலைவர் இருவரும் கணவன் ,மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., கவுன்சிலர் உமாராணிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்தது. இதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் தனது கைக்குழுந்தையோடு செவிலியர்கள் உதவியோடு ஓட்டளிக்க ஆம்புலன்சில் வந்தார். குழந்தை பிறந்து 30 மணி நேரத்தில் ஓட்டளிக்க வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இவரை பலரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X