பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் பகுதியில் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 12, 2020
Advertisement
 தியாகதுருகம் பகுதியில் ஆருத்ரா தரிசனம்

தியாகதுருகம்:தியாகதுருகம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர்.அதே போன்று, புக்குளம் கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முடியனுார் ஆதி அருணாசலேஸ்வரர் கோவில், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில், குடியநல்லுார் கைலாசநாதர் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X