சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

Added : ஜன 12, 2020
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே குடிபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சந்துரு, 35; குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த 7ம் தேதி மாலை 3:15 மணிக்கு போதை அதிகமான நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.பலத்த காயமடைந்த அவரை, மீட்டு, தீவிர சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்த அவரது மனைவி தேவகி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X