பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020
Advertisement
 ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தல், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்தி வைக்கபபட்டுள்ளது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 24 பேரில் தி.மு.க., சார்பில் 15ம், அ.தி.மு.க.,சார்பில் 9 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.நேற்று தலைவர் தேர்தலுக்காக ஒன்றிய அலுவலகத்திற்கு இரு தரப்பினரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். தேர்தல் அலுவலர் செல்வராஜ், தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்களை தவிர வேறு நபர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.பகல் 12:00 மணி வரை எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

பின் வெளியே வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெற்றி கோஷமிட்டனர்.தி.மு.க., கவுன்சிலர்கள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை நடத்த மறுப்பதாக கூறி மற்றொரு பகுதியில் கூடினர். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

தி.மு.க. எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் மற்றும் எம்.பி., தனுஷ்குமார் அதிகாரிகளிடம் திரும்ப கூட்டத்தை நடத்த கோரியதுடன், தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வராஜிடம் தி.மு.க., கவுன்சிலர்கள் 15 பேர் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டு சந்திக்க வேண்டும் என்று கோரினர். இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தல் அலுவலர் ஆம்புலன்சில் வெளியேற முயற்சி செய்வதாக அலுவலகத்தின் மூன்று வாசல்களிலும் தி.மு.க., கவுன்சிலர்கள் அமர்ந்து கொண்டனர்.

அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஏ.டி.எஸ்.பி., மாரிராஜ் மற்றும் டி.எஸ்.பி., நாக சங்கர் கவுன்சிலர்கள் பங்கேற்றதற்கான சான்றிதழை பெற்று வழங்கினர். இதனால் முற்றுகை மாலை 3:00 மணியளவில் முடிவுக்கு வந்தது.கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி,. மற்றும் எம்.எல்.ஏ., சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X