பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் இயந்திரங்கள் சேவை மையம்: கலெக்டர் ஆய்வு

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 வேளாண் இயந்திரங்கள் சேவை மையம்: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி:ள்ளக்குறிச்சியில் வேளாண் இயந்திரங்கள் சேவை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பலவற்றை வாங்கி விவசாயிகள் சிலர் பயன்|படுத்தி வருகின்றனர். இச்சேவை மையத்திலிருந்து சிறு விவசாயிகள் தங்களது விருப்பத்திற்கேற்ப இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.வேளாண் இயந்திரங்கள் சேவை மையத்தினை கலெக்டர் கிரண் குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேளாண்மை பொறியியல் துறை மூலம் உலகங்காத்தான், சடையம்பட்டு சேர்ந்த விவசாயிகள் இருவருக்கு அரசு மானியத்தில் டிராக்டர்கள் வழங்கினார்.வேளாண்மை செயற் பொறியாளர் குமாரகணேஷ், பொறியாளர் கணேசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரத்தினமாலா, விவசாயி செல்வாநாயகம் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X