அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement
 தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி:விழுப்புரம் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில், மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், தாஸ், அருண்ராஜ், அலெக்சாண்டார், குணசேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார். கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி, சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞரணி அணி சார்பில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தங்க கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, துணைச் செயலர் காமராஜ், ஒன்றிய செயலர்கள் வெங்கடாசலம், ஆறுமுகம், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, விவசாய அணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பு மணிமாறன், நகர இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X