'வரலாற்றில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன': மோடி வருத்தம்

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (45)
Advertisement
 

'வரலாற்றில் விஷயங்கள் விடுபட்டுள்ளன' :
பிரதமர் மோடி வருத்தம்

கொல்கத்தா:'' சுதந்திரத்திற்கு பின், நாட்டின் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்கள், பல முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிட்டனர்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கோல்கட்டா வந்த அவர், அங்குள்ள 'விக்டோரியா நினைவு மண்டபம். கரன்சி கட்டடம்' உள்ளிட்ட நான்கு, புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய கட்டடங்களை, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இவ்விழாவில் அவர் பேசியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியிலும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் எழுதப்பட்ட இந்திய வரலாற்றில், பல முக்கிய அம்சங்கள் விடுபட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. சிலர், வெளியில் இருந்து இந்நாட்டிற்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்காக, சொந்த உறவுகளையும், சகோதரர்களையும் கொன்று குவித்தனர் என்பது மட்டுமே, நம் வரலாறு அல்ல. அப்போது, நம் நாட்டு மக்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை வரலாறு சொல்லவில்லை.
இதை, நான் கூறவில்லை. இதுபற்றி, கவிஞர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 1903ல் எழுதியுள்ளார். 'இந்திய வரலாறு, மாணவர்கள், தேர்வுக்காக படிக்கும் வரலாறு அல்ல' என, அவர் அன்றே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, மோடி பேசினார்.

பிரதமர் மோடி, கோல்கட்டா துறைமுக பொறுப்பு கழகத்தின், 150வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, ஹவுரா பாலத்தில், ஒலி,ஒலி கண்காட்சியை துவக்கி வைத்தார். இவ்விழாவில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் ஜக்தீப் தன்கர், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மன்டாவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
12-ஜன-202020:15:16 IST Report Abuse
natarajan s உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார், பிஜேபி வந்து சொல்லும்வரை எத்தனை பேருக்கு ஷியாம்பிரசாத் முகர்ஜியை பற்றி தெரியும் (மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ) , அவர் நேரு மந்திரி சபையில் பணியாற்றிவர், ஜனசங்கத்து காரர் காஷ்மீரில் அமைதிக்கு பேச்சுவார்த்தைக்கு போனவர் திரும்பி வரவே இல்லை ,எப்படி இறந்தார் என்று தெரியவில்லை , இன்னும் அது மர்மம்தான். அதுபோல் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழத்தில் இருந்த அளவிற்கு சுதந்திர போராட்டம் வேறு பகுதிகளில் இல்லை அதுவும் மறைக்கப்பட்டு விட்டது . the history is written by the victor அதனால்தான் ஆங்கிலேயர்கள் முஸ்லீம் மன்னர்களை மட்டும் glorify செய்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்த இந்து மன்னர்களை பற்றிய செய்திகளை மறைத்து விட்டனர்
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
12-ஜன-202018:58:40 IST Report Abuse
Rajas உங்கள் ஆட்கள் சொன்ன வரலாறை பலமுறை செக் செய்து கொள்ளவும். ஏனென்றால் நீங்கள் எதை தொட்டாலும் பூமராங் போல உங்களையே தாக்குகிறது.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜன-202016:27:51 IST Report Abuse
dandy காந்தியும் ..நேருவும் தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் ..ஆயிரக்கணக்கில் இறந்த மக்கள் எல்லாரும் கோமாளிகள் .. இந்திரா பெரோஸ் கான் காலத்தில் டெல்லியில் புதைக்க பட்ட பேழையை எடுத்து படித்து பார்க்க வேண்டும் இல்லாவிட்டால் ..இவர்கள் நேரு குடும்பம் தான் சுதந்திரம் பெற்று தந்தார்கள் .. சோனியா இத்தாலிய இளவரசி என்றும் எதிர்கால சமுதாயத்திற்காக எழுதி புதைத்து இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X