சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

Added : ஜன 12, 2020
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே வயிற்று வலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 40; இவரது கணவர் நடராஜன், 45; விவசாய கூலித் தொழிலாளி. நடராஜன் கடந்த 5 ஆண்டுகளாக கிட்னி பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த நடராஜன் கடந்த 10ம் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடராஜன் இறந்தார்.வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X