பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் பதக்கங்கம்: எம்.பி., சூளுரை

Added : ஜன 12, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:தமிழக மாணவ, மாணவிகள் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் பதக்கங்களை பெறுவதற்கு சூளுரை எடுத்துக் கொள்வதாக கவுதம்சிகாமணி எம்.பி., பேசினார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த மாவட்ட வாலிபால் கழக துவக்க விழாவில், தமிழக வாலிபால் கழக தலைவர் கவுதம்சிகாமணி எம்.பி., பேசுகையில், 'கடந்த 60 ஆண்டுகளாக வாலிபால் தமிழகத்தில் வெற்றிநடை போட்டு வந்தது.இடையில் சுணக்கம் ஏற்பட்டு தொய்வானது. அவைகள் களையப்பட்டு, புதிய பொலிவினைநோக்கி பயணித்து வருகிறது.கஷ்டங்கள் இல்லாது எந்த செயலும் இல்லை. இடர்பாடுகள், இன்னல்கள் நீங்க எண்ணம் வரவேண்டும்.கட்சி பணி, அரசியல் பணி பொறுப்புகள் தலைமைக்கு மேல் உள்ளது. அதன் நடுவே வாலிபால் போட்டியிலும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தேவை.இடைவிடாது பணியாற்றி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்துடன் பயிற்சி அளிப்போம். வாலிபால் விளையாட்டில் தமிழக மாணவ, மாணவிகள் தேசிய அளவில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை பெற இவ்விழாவில் சூளுரை கொள்கிறேன்.இவ்வாறு கவுதம்சிகாமணி எம்.பி., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X