பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு காங்., பெண் கவுன்சிலரால் பதற்றம்

Added : ஜன 12, 2020
Advertisement

சிவகங்கை:அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பங்கேற்காததால் போதிய எண்ணிக்கை இன்றி (கோரம்) சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடத்தப்பட்டதாக
சந்தேகிக்கப்பட்ட காங்., பெண் கவுன்சிலரை கலெக்டர் பாதுகாப்பாக அழைத்து சென்று வீட்டில் இறக்கிவிட்டார்.

சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க.,- 8, தி.மு.க.,- 5, காங்.,- 2, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி- 1 என இடங்களை கைப்பற்றினர். இருதரப்பும் சமநிலை என்பதால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தி.மு.க., அணியில் இருந்து கவுன்சிலர்களை இழுக்க அ.தி.மு.க., களத்தில் இறங்கியது.
இந்நிலையில் 15வது வார்டு காங்., கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி கடத்தப்பட்டதாக
அவரது மகன் அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

'ஆரோக்கிய சாந்தாராணி சிவகங்கை கலெக்டர் முன் ஆஜராக வேண்டும். கலெக்டர்
விசாரணை நடத்தி அவர் சுதந்திரமாக ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.தலைவர் தேர்தலுக்காக நேற்று காலை 10:00 மணிக்கு ஆரோக்கிய சாந்தா ராணி உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் எட்டு பேரும் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கம் அளிக்க ஆரோக்கிய சாந்தாராணி காலை 10:30 மணிக்கு கலெக்டரின் அறைக்கு சென்றார். அங்கு தி.மு.க., மாவட்ட செயலர் பெரியகருப்பனும் வந்திருந்தார்.

இதனால் அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதனும் ஆதரவாளர்களுடன் கலெக்டரின் அறைக்கு செல்ல முயன்றார். அவர்களை நுழைவுவாயிலில் போலீசார் தடுத்தனர்.
'பெரியகருப்பனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்' என தடுப்பை விலக்கிக்கொண்டு அவர் சென்றார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் நடக்கவில்லை.பகல் 2:00 மணிக்கு தேர்தல் நடைமுறை மீண்டும் தொடங்கியது. அப்போதும் அ.தி.மு.க.,வினர் வரவில்லை.
தேர்தல் நடத்த மொத்த இடங்களில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை இருக்க வேண்டும். இதனால் 'கோரம்' இன்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர்.

அப்போது மேல்தளத்தில் பெரியகருப்பனும், வெளியே ஆரோக்கிய சாந்தாராணியின்
குடும்பத்தினருடன் செந்தில்நாதனும் காத்திருந்தனர். தங்களது கவுன்சிலர்களை தி.மு.க.,வினர் சுற்றி நின்று அழைத்து வந்தனர். அப்போது ஆரோக்கிய சாந்தாராணியை தங்களிடம் வருமாறு குடும்பத்தினர் அழைத்தனர். தி.மு.க.,வினர் அவரை விடாமல் பிடித்து கொண்டனர்.
தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கவுன்சிலர்கள் எட்டு பேரும் மீண்டும் உள்ளே அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கு பெரியகருப்பன் இருந்ததால் செந்தில்நாதனும், பெண் கவுன்சிலரின் குடும்பத்தினரும் உள்ளே செல்ல முயன்றனர். போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்
அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு ஆரோக்கிய சாந்தாராணியை அவரது
விருப்பத்தின்படி குடும்பத்தினருடன் கலெக்டர் ஜெயகாந்தன் காரில் அழைத்துச்சென்றார்.
பின், அவர்களது வீட்டில் இறக்கி விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X