பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண்டல ஆய்வு கூட்டம்

Added : ஜன 12, 2020
Advertisement
 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மண்டல ஆய்வு கூட்டம்

விழுப்புரம்:விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லுாரியில், தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மண்டல ஆய்வுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
மைய இயக்குனர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழில் முனைவோர் மைய கூடுதல் இயக்குனர் சஜீவனா, இணை இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினர்.இதில் பிரதமரின் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், தமிழக முதல்வரின் புதிய தொழில்முனைவோர் திட்டம் ஆகியவை இம்மையத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசின் தொலைநிலை பல்கலைகழகம் மூலம் தொழில்முனைவோர் பட்டய படிப்பு பயில மைய மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கில் அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கான இணைப்பு கல்லுாரிகளில் இருந்து 50 மேற்பட்ட தொழில்முனைவேர், ஒருங்கினைப்பாளர்கள் பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செந்தில் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கள ஒருங்கிணைப்பாளர் கண்ணன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X