பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி பரிமாற்றுத்திட்ட நிகழ்ச்சி

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 பள்ளி பரிமாற்றுத்திட்ட நிகழ்ச்சி

திண்டிவனம்:திண்டிவனத்தில் எம்.டி.கிரேன் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், பள்ளி பரிமாற்றுத்திட்ட நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் அடிப்படையில், பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒலக்கூர் வட்டாரக் கல்வி அலுவலர் கோவர்த்தனன் தலைமை தாங்கி பேசினார்.பள்ளி மாற்றுத்திட்டத்தின் கீழ், தேசிய மேல்நிலைப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளை, எம்.டி.கிரேன் பள்ளியின் தலைமையாசிரியர் மேரி வினோதினி வரவேற்றார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆங்கில இலக்கண வகுப்பை ஆசிரியை இவான்சலின் லுாயிஸ், அறிவியல் வகுப்பை ஆசிரியர் நாகராஜனும் நடத்தினர். பின்னர் நடந்த கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X