பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி

Added : ஜன 12, 2020
Advertisement
 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சி

விழுப்புரம்:தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி நடந்தது.
தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து, 'இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மானக்' விருதிற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.இந்த விருதை பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த 108 மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.கண்காட்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி துவக்கி வைத்து, பார்வையிட்டார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணபிரியா, நடராஜன், கார்த்திகா, மணிமொழி, சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
டில்லி, தேசிய புத்தாக்க அறக்கட்டளை சார்பில் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களின் படைப்புகளாக, மழைநீர் சேகரிப்பு, அணு மற்றும் அனல்மின் நிலையம், சோலார் சிட்டி, தீப்பிடித்தால் தானே தீயை அணைக்கும் முறை, செயற்கைகோள், மூலிகை தாவரங்கள், தானியங்கி வேக கட்டுப்பாட்டு கருவி, நெகிழியை பயன்படுத்தினால் ஆயுளுக்கு உண்டாக்கும் கேடு உட்பட பல அறிவியல் சார்ந்த படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த படைப்புகளில் சிறந்தவற்றை தேர்வு செய்யும் பணிகளில், ஐந்து கல்லுாரி விரிவுரையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், சிறந்த 22 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மிக சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X