சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எஸ்.பி.,யிடம் கிராம மக்கள் மனு

Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விழுப்புரம்:மணல் கடத்திய ஆசாமிக்கு துணையாக இருந்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராம மக்கள், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், திறந்தவெளி கிணறு வெட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி நடந்தது. இந்த கிணறு வெட்டும் போது அதிகளவு மணல் கிடைத்தது. அந்த மணலை, கிணறு வெட்டும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம், எங்கள் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரிடம் ஒப்படைத்தனர்.அவர் கிணறு தோண்டும் போது கிடைத்த மணலை, தனது சொந்த பயன்பாட்டிற்காக லாரி மற்றும் டிராக்டர் மூலம் 40 லோடுகளை கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக நாங்கள், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மணல் தோண்ட பயன்படுத்திய பொக்லைன் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கைக்கோரி, போலீஸ் நிலையத்தில் மனு அளித்தோம்.
நடவடிக்கை எடுப்பதாக கூறிய இன்ஸ்பெக்டர், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பறிமுதல் செய்த வாகனங்களையும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மணலை கொள்ளையடித்த நபர்கள் மீதும், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவித்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12-ஜன-202009:20:32 IST Report Abuse
Mani . V இன்ஸ்பெக்டரின் பணியை, கடமையை(?) ஒழுங்காக செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கும் கிராம மக்களின் கோரிக்கைக்கு எஸ்.பி அனுமதியளிக்கக்கூடாது. முடிந்தால் கிராம மக்கள் அனைவரையும் அள்ளி சிறையில் தள்ளிவிட்டு இன்ஸ்பெக்டரை அவரின் கடத்தல் தொழிலை திறம்பட செய்ய உதவி புரியவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X