பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல்

Added : ஜன 12, 2020
Advertisement

திருக்கோவிலுார்:வேளாண் துறை சார்பில் விவசாயிகளுடன் அரசின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கோவிலுார் மற்றும் முகையூர் வட்டார வேளாண் துறை சார்பில், அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திருக்கோவிலூரில் நடந்தது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வரவேற்றார். துணை வேளாண்மை அலுவலர்கள் சாந்தலட்சுமி, புகழேந்தி முன்னிலை வகித்தனர்.வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி அரசின் வேளாண் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் நவீன வேளாண் உற்பத்தி குறித்து விளக்க உரையாற்றினார்.
இதில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், மகாதேவன், மைக்கேல், ஜெயப்பிரதா, ஜெயப்பிரகாஷ், ஞானவேல், சிவகுமார், வெங்கடேச பெருமாள், வெங்கடகிருஷ்ணன், ஆத்மா அலுவலர்கள் சஞ்சய்காந்தி, மணிவேல், ஜெயந்தி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கனகலிங்கம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X