சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் ஒருவர் பலி

Added : ஜன 12, 2020
Advertisement

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையைக் கடக்க முயன்ற ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பாலப்பட்டைச் சேர்ந்தவர் பரமசிவம், 60; ஓய்வுபெற்ற கிராம உதவியாளர். இவர், நேற்று முன்தினம் இரவு பாலப்பட்டிலிருந்து திண்டிவனம் சென்று பஸ்சில் திரும்பினார். இரவு நேரம் என்பதால் அவர் இறங்க வேண்டிய பாலப்பட்டு பஸ் ஸ்டாபில் இறங்காமல் அடுத்த பஸ் ஸ்டாபான பேரணி கூட்டுரோடு பஸ் ஸ்டாபில் இறங்கி மீண்டும் பாலப்பட்டு செல்வதற்காக பைபாஸ் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில், படுகாயமடைந்த பரமசிவம், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரமசிவம் இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X