பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து ஜமாத் கூட்டமைப்பு ஊர்வலம்

Added : ஜன 12, 2020
Advertisement

விழுப்புரம்:இந்திய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, விழுப்புரத்தில் ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், அனைத்து மஹால்லா ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, அனைத்து உலமாக்கள் ஜமா அத் தலைவர் ஹாஜி அஜ்ரப் ஹதரத் தலைமை தாங்கினார். எம்.பி.,க்கள் கவுதமசிகாமணி, ரவிக்குமார், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சரவணன், மா.கம்யூ., மாவட்ட செயலர் சுப்ரமணியன்முன்னிலை வகித்தனர்.குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, பழைய பஸ் நிலையத்தில் துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை வந்த ஊர்வலத்தினர் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, மனு கொடுத்தனர்.தி.மு.க., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், காங்., மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், ரமேஷ், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், ஜமாஅத் நிர்வாகிகள் முஸ்தாக், ஷாஜகான், முபாரக் அலி, அமீர் அப்பாஸ், லுக்மான், ரபீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X