பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வெற்றி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Added : ஜன 12, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வினர் சிலர் பங்கேற்காததால் பெரும்பான்மையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக அ.தி.மு.க., வினர் 6 பேரும், தி.மு.க.,வில் 7 பேர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து கவுன்சிலர் பதவியேற்பு விழாவின் போது, தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சிவக்குமார் அ.தி.மு.க., விற்கு மாறினார். நேற்று தி.மு.க., வினர் ஒன்றிய
அலுவலகத்திற்கு காலை 10:30மணிக்கு வந்தனர்.

தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7 பேரும் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் ஆகியோருடன் 11:00 மணிக்கு வந்து வாழ்த்தி அனுப்பி
சென்றனர்.தேர்தல் அதிகாரி ரத்தினகுமார் தலைமையில், தலைவர் பதவிக்கானமறைமுக
தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் அ.தி.மு.க., சார்பில் சிந்தாமணியும்,தி.மு.க., சார்பில்கலைச்செல்வியும் போட்டியிட்டனர். தொடர்ந்து சிந்தாமணி8 வாக்குகளும், கலைச்செல்வி 5 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து
பல ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., வசம் இருந்த பரமக்குடி ஒன்றியம்அ.தி.மு.க., வசமாகியது.

* மதியம் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வைச் சேர்ந்த ராஜேந்திரன்,
சுப்பிரமணியன் இடையே போட்டி நிலவியது.தொடர்ந்து தேர்தலில் பங்கேற்க அ.தி.மு.க., வினர் சிலர் வரவில்லை. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.அ.தி.மு.க., கவுன்சிலர்
ராஜேந்திரன் கூறுகையில்,எனக்கு துணைத்தலைவர் பதவி கொடுக்க அ.தி.மு.க., தலைமை மறுத்ததால்நான் நாளை(ஜன. 12) கலெக்டரிடம் எனது கவுன்சிலர் பதவிக்கான ராஜினாமா
கடிதத்தை அளிக்கவுள்ளேன், என்றார்.

துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு:

*முதுகுளத்துார் ஒன்றியம் 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அ.ம.மு.க,வை சேர்ந்த 5வது வார்டு
உறுப்பினர் முருகன் என்பவரும் அ.தி.மு.க,வை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் தர்மர்
என்பவரும் போட்டியிட்டனர்.இதில் 9 வாக்குகள் பெற்ற தர்மர் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பகல் 3:00 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கானதேர்தல் நடைபெற்றது.

இதில் 15 வார்டு உறுப்பினர்களில் கூடுதல் பெரும்பான்மை நிருபிக்காததால் தேதி
குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிசந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X