அரசியல் செய்தி

தமிழ்நாடு

12 ஒன்றியத்தையும் 'கைப்பற்றியது' அ.தி.மு.க.,

Added : ஜன 12, 2020
Advertisement

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள, 12 ஒன்றியங்களையும் அ.தி.மு.க., கைப்பற்றியது.கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
12 ஒன்றியங்களில், 155 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. 89 இடங்களை அ.தி.மு.க., கூட்டணியினரும், 55 இடங்களை தி.மு.க., கூட்டணியினரும், 11 இடங்களை சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இருப்பினும், 12 ஒன்றிய தலைவர் பதவிக்கும், அ.தி.மு.க.,வினரே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோட்டை விட்ட தி.மு.க.,அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது; தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன், வேட்பு மனு வழங்கினார்.
அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரும், ஒன்றாவது வார்டு உறுப்பினருமான பழனிச்சாமி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.அன்னுார் ஒன்றியத்தில், அ.தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இரு இடங்களில் சுயேச்சை கள் வெற்றி பெற்றனர். தி.மு.க., முயற்சித்திருந்ததால், தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை கைப்பற்றியிருக்கலாம்.
போட்டியிட்டு தோல்வி
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலராக உமாதேவி, பணியாற்றினார். இந்த ஒன்றியத்தில் ஐந்து கவுன்சிலர் பதவி உள்ளது. அ.தி.மு.க.., சார்பில் போட்டியிட்ட கவிதா மூன்று ஓட்டுகளும், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராஜம்மாள் இரண்டு ஓட்டுகளும் பெற்றனர். அ.தி.மு.க.,வின் கவிதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எஸ்.எஸ்.குளத்தில் வாய்ப்பு இல்லாத போதிலும், தி.மு.க., போட்டியிட்டு, தோல்வியை தழுவியது.போட்டியின்றி தேர்வுபெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 12 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். 8 இடங்களை அ.தி.மு.க., மூன்று இடங்களை தி.மு.க., ஒரு இடத்தை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.
ஒன்றிய தலைவருக்கான போட்டியில், 9வது வார்டில் தேர்வான, அ.தி.மு.க., நர்மதா, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர், பி.பி.எம்., பட்டதாரி. இவரது தந்தை பெரியநாய்க்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் துரைசாமி.காரமடை ஒன்றியத்தில், 21 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். 16 இடங்களில் அ.தி.மு.க., மூன்று இடங்களில் தி.மு.க., தலா ஒரு இடத்தில் தே.மு.தி.க., பா.ஜ., வெற்றி பெற்றது. ஏழாவது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் மணிமேகலை, போட்டியின்றி தலைவராக தேர்வானார்.
துணை தலைவர் தேர்தலில், 16வது வார்டு கவுன்சிலர் லட்சுமி பிரியா போட்டியின்றி தேர்வு பெற்றார்.இணைந்ததால் பதவிசூலுார் ஒன்றியத்தில் உள்ள, 14 கவுன்சிலர் வார்டுகளில், அ.தி.மு.க., ஏழு இடங்களிலும், தி.மு.க., ஐந்து இடங்களிலும், சுயேச்சை கள் இரு இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதில், சுயேச்சை யாக வென்ற, மூன்றாவது வார்டு கவுன்சிலர் சுரேந்திர மோகன், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இதனால், கவுன்சிலர்கள் பலம் எட்டாக உயர்ந்தது.அ.தி.மு.க., சார்பில் மாதப்பூர் பாலு, தி.மு.க., சார்பில், தமிழரசி போட்டியிட்டனர். இதில், மாதப்பூர் பாலு எட்டு ஓட்டு பெற்று தலைவராக தேர்வானார். தமிழரசி ஆறு ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க.,வில் இணைந்த சுரேந்திர மோகன், துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுயேச்சை க்கு பதவிசுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள, 13 கவுன்சிலர் வார்டுகளில், அ.தி.மு.க., ஆறு வார்டுகளிலும், தி.மு.க., - 4, காங்., - 2 இடங்களில் வெற்றி பெற்றன. பாப்பம்பட்டியில் சுயேச்சை வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றார். நேற்று நடந்த ஒன்றிய தலைவர் தேர்தலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த ரத்தினம், ஏழு ஓட்டு பெற்று தலைவரானார். இவர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., கனகராஜ் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., மகாலிங்கம், ஆறு ஓட்டுகள் பெற்றார். துணை தலைவராக மனோகரன் போட்டியின்றி தேர்வானார்.தி.மு.க., புறக்கணிப்புதொண்டாமுத்துார் ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 9 ஒன்றிய கவுன்சிலர்களில், 6 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 3 தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலை நடத்தினார். அ.தி.மு.க., சார்பில், ஒன்றாவது வார்டில் வெற்றி பெற்ற மதுமதி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.துணை தலைவருஈக்கான தேர்தலையும், தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இதில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, 9வது வார்டு கவுன்சிலரான கனகராஜ், ஒன்றியக்குழு துணை தலைவராக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களையும், அ.தி.மு.க.,வினரே கைப்பற்றினர்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X