பொது செய்தி

தமிழ்நாடு

'கறவைகள் பின்சென்று

Added : ஜன 12, 2020
Share
Advertisement
 'கறவைகள் பின்சென்று

கோவை - பொள்ளாச்சி ரோட்டில், சுந்தராபுரம் தேவர் சிலை அருகே அமைந்துள்ள, ஸ்ரீவேதவல்லி, ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், நாளை காலை, 5:00 மணிக்கு, மார்கழி மாதத்தை ஒட்டி, ஆண்டாள் நமக்கு அருளிய திருப்பாவையின், 28ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், 700 ஆண்டுகள் பழமையானது. தாயாரும், பெருமாளும் ஒரே சன்னதியில் அருள்பாலிப்பது விசேஷம். இங்குள்ள பெருமாளை சேவித்தால், கல்யாண வரம் அருள்கிறார்.ஒரு குடும்பத்தில், பெற்றோருக்கும் பிறந்த குழந்தைக்கும் நட்சத்திரம், ராசி ஒரே மாதிரி இருந்தால், இப்பெருமாளிடம் தத்துக்கொடுத்து திரும்ப பெற்றுச் சென்று, கஷ்டத்தில் இருந்து விடுபடுகின்றனர். இங்கு எப்போதும் குசேலருக்கு கிருஷ்ணர் வழங்கிய, அவல், கரும்பு சர்க்கரை பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.மார்கழி மாதத்தை ஒட்டி, இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு, 'கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்' என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்இறைவா, நாங்கள் எள் அளவும் அறிவில்லாத ஆயர் குலத்தில் பிறந்து, மாடு மேய்த்து உடம்பை வளர்த்து வாழ்பவர்கள். நீயோ குறையொன்றும் இல்லாத கோவிந்தன். குறைவற்ற செல்வனாய் விளங்கும் நீ எங்கள் இடை குலத்தில் பிறக்க எத்தனை புண்ணியம் நாங்கள் செய்திருப்போம். அதனால், எங்களுக்கும் உனக்கும் உள்ள உறவு, எக்காலத்திலும் யாராலும் ஒழிக்க நினைத்தாலும் ஒழியாது.அறியாத பெண்களாகிய நாங்கள் உன்னை கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று சிறு சிறு பெயர்களால் அழைத்தாலும், நீ கோபித்துக் கொள்ளாது எங்களுக்குப் பறை என்ற அருளை தருவாயாக என்று கெஞ்சிக் கேட்கின்றனர் ஆயர்பாடி பெண்கள், என்பதே இப்பாடலின் பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X