கள்ளக்குறிச்சி மாவட்ட வாலிபால் கழக துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்ட வாலிபால் கழக துவக்க விழா

Added : ஜன 12, 2020
 கள்ளக்குறிச்சி மாவட்ட வாலிபால் கழக துவக்க விழா

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட வாலிபால் கழக துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஏ.கே.டி., பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி., கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். வாலிபால் கழக ஆர்வலர்கள் விஜயகுமார், மனோகர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜோதிலிங்கம் வரவேற்றார். ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளை வாலிபால் விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதில் அரசின் நோக்கம் குறித்து உடற்கல்வி ஆசிரியர் பேசினார்.விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட வாலிபால் கழக தலைவராக ஏ.கே.டி., பள்ளிக் கல்விக் குழும நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். வாலிபால் கழக சேர்மனாக மனோகர், துணை சேர்மன்களாக அசோக்குமார், வைத்தியலிங்கம், செயலராக பாலாஜி, துணைத்தலைவராக விஜயகுமார், பொருளாளராக ராஜா, துணைச் செயலர்களாக செல்வராஜ், ராதாகிருஷ்ணன், சின்னையன், மணி, முத்துராமன், அழகேசன் ஒருங்கிணைப்பாளராக ராஜேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்ட வாலிபால் கழக செயலராக மணி, அரியலுார் மாவட்ட வாலிபால் கழக தலைவராக பூமிநாதன், செயலர்களாக வில்லாளன், காளிதாஸ் பதவியேற்றனர்.
புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு தமிழக வாலிபால் கழக தலைவர் கவுதமசிகாமணி எம்.பி., பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசினார்.புதிய நிர்வாகிகளை சங்கராபுரம் அரிமா சங்கத்தினர், ஏ.கே.டி., பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கவுரவித்தனர். தேசிய அளவிலும் மற்றும்தமிழக அளவிலும் நடைபெறும் வாலிபால் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X