கால்பந்து; 'சாதித்தது' சாஸ்வி

Added : ஜன 12, 2020
Share
Advertisement

கோவை:குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த தீரன் சின்னமலை கோப்பைக்கான கால்பந்து போட்டியில், சாஸ்வி, ஏ.வி.பி., பள்ளிகள் வெற்றி பெற்றன.சரவணம்பட்டியில் உள்ள, குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில், ராமானந்த அடிகளார் கல்வி நிறுவனங்கள், குமரகுரு கல்லுாரி மற்றும் தீரன் சின்னமலை விளையாட்டு மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தீரன் சின்னமலை கோப்பை கால்பந்து போட்டி நடந்தது.சாஸ்வி பள்ளியும், கோபால் நாயுடு பள்ளியும் மோதின. போட்டியில், முதல் பாதி ஆட்டத்திலேயே இரு அணிகளும், தலா ஒரு கோல் அடித்தன. ஆட்ட நேர இறுதி வரை, இரு அணிகளாலும், கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட் முறையில், 4-2 என்ற கோல் கணக்கில், சாஸ்வி அணி வெற்றி பெற்றது.ஏ.வி.பி., மற்றும் சி.எம்.எஸ்., அணிகள் மோதிய போட்டியில், ஏ.வி.பி., அணி, 1-0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X