சுகுணா கோப்பை கபடி; அரையிறுதியில் அரசு பள்ளி

Added : ஜன 12, 2020
Advertisement

கோவை:சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த, பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி, மாணவர் பிரிவில், பல்லடம் அரசு பள்ளியும், மாணவியர் பிரிவில் கொடுவேரி புனித பிரான்ஸ் பள்ளியும் அரையிறுதிக்கு முன்னேறின.கோவை, பீளமேடு, நேரு நகரில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், மாநில அளவில், பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த, 60 அணிகள் பங்கேற்றன.மாணவர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் எம்.பி.எல்., மேல்நிலைப்பள்ளியை, 49-18 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.கோவை கிரசென்ட் பள்ளி, 28-26 என்ற புள்ளிக்கணக்கில், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியையும், சேலம் அரசு பள்ளி, 26-15 என்ற புள்ளிக்கணக்கில், கோவை எஸ்.வி.வி.எம்., பள்ளியையும், நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயா, 28-5 என்ற புள்ளிக்கணக்கில், கோவை அன்னை வேளாங்கண்ணி பள்ளியையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறின.மாணவியர் பிரிவில், சி.சி.எம்.ஏ., பள்ளி, 17-10 என்ற புள்ளிக்கணக்கில், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. கொடுவேரி புனித பிரான்ஸ் பள்ளி, 36-16 என்ற புள்ளிக்கணக்கில், வித்யா நிகேதன் பள்ளியையும், வித்யா நிகேதன் பள்ளி, 17-13 என்ற புள்ளிக்கணக்கில், குரு சரண் பப்ளிக் பள்ளியையும், புனித இன்னாச்சியார் பள்ளி, 36-16 என்ற புள்ளிக்கணக்கில், அமிர்த வித்யாலயத்தையும் வென்று, அரையிறுதிக்கு முன்னேறின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X