தமிழ்நாடு

வெட்கமில்லையா? மருத்துவமனைகளுக்கு நடுவே மதுக்கடை

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெட்கமில்லையா? மருத்துவமனைகளுக்கு நடுவே மதுக்கடை

போத்தனுா: கோவை, சுந்தராபுரம் அருகே, மருத்துவமனைகளுக்கு நடுவே மதுக்கடை திறந்திருப்பது, பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், ஆளுங்கட்சி மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுந்தராபுரம் அருகே சாரதா மில் ரோடு சந்திப்பு பகுதியில், ஏராளளான கடைகள் இருக்கின்றன. இவற்றையொட்டி, பஸ் ஸ்டாப் உள்ளது. குழந்தைகளுக்கான இரு கிளினிக்குகள், இரு பொது மருத்துவமனைகள் மற்றும் பல் சிகிச்சை கிளினிக் ஆகியவை செயல்படுகின்றன. இம்மருத்துவமனைகளுக்கு நடுவே புதிதாக ஒரு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். மதுக்கடை திறக்கப்பட்டது, மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மதுக்கடை இருக்கக்கூடாது என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, கடையை திறந்துள்ளனர். இது, 1.5 கி.மீ., துாரத்துக்குள் நான்காவது கடையாகவும், 4 கி.மீ., துாரத்துக்குள் ஒன்பதாவது கடையாகவும் திறக்கப்பட்டுள்ளது.'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளான பிப்., 24ல், 500 மதுக்கடைகள் மூடப்படும்' என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அதை மீறி, சுந்தராபுரத்தை சுற்றிலும் கூடுதாக கடைகள் திறப்பது, ஆளுங்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகர்கள், டாக்டர்கள், அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு, முற்றுகை போராட்டம் நடத்த முயன்றபோது, போலீசார் சமாதானம் செய்தனர். 'மதுக்கடை திறக்க மாட்டோம்' என, 'டாஸ்மாக்' மண்டல மேலாளர் உறுதியளித்தார். இருப்பினும், மக்களிடம் கொந்தளிப்பு குறையவில்லை. பொங்கல் திருநாளை சந்தோஷமாக கொண்டாட, பரிசு தொகுப்பும், ரூ.1,000 கொடுத்து விட்டு, வீதிக்கு வீதி மதுக்கடை திறப்பது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.


பாதுகாப்பு இல்லை


டாக்டர் தண்டபாணி கூறுகையில்,''மருத்துவமனைகளுக்கு கால நேரமின்றி, எப்போது வேண்டுமானாலும் பெண்கள் வருவர். மதுக்கடை செயல்பட்டால், அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவசர உதவிக்கு கூட வர இயலாத நிலை ஏற்படும்,'' என்றார்.

மாநில ம.தி.மு.க., இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''சுற்றுப்பகுதியில், 1.5 கி.மீ.,க்குள் மூன்று மதுக்கடைகள் உள்ளன. 4 கி.மீ., சுற்றளவில் எட்டு கடைகள் உள்ளன. இன்னொரு மதுக்கடை தேவையா? இக்கடையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மதுக்கடை வைக்கக்கூடாது என்பது மக்களின் எண்ணம்,'' என்றார்.

ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் சந்திரன் கூறுகையில்,''வர்த்தகம் பாதிப்பது ஒருபுறம் என்றாலும், இப்பகுதி மிகவும் குறுகியதாக உள்ளதால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜன-202006:18:16 IST Report Abuse
ஆப்பு வெக்கமாவது? துக்கமாவது. கோவிலுக்குள்ளேயே தொறந்தாலும் ஓக்கே இவிய்ங்களுக்கு. ரெண்டு எடத்திலேயும் நிறைய பேர் வருவாய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X