பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்காக பள்ளியில் 'மாதிரி கிராமம்' வேட்டி, சேலையுடன் மாணவர்கள் அசத்தல்

Added : ஜன 12, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது கரும்பு , சர்க்கரை பொங்கல் தான். தை பொங்கல் என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு தனிபெரும் விழா.
உழைக்கும் மக்கள் தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலுக்காக கொண்டாடப்படுகிறது

பொங்கல். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம்.அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில்
சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியன், மாட்டுக்கும் படைத்து விட்டு உண்டு மகிழப்படுகிறது.ஆனால் இன்றைய கால குழந்தைகளுக்கு பாரம்பரிய பொங்கல் என்பது மறந்து விட்டது. எப்படி கொண்டாடுவது, எதற்காக என்றும் தெரிவதில்லை.

நாமும் அதை சொல்லி கொடுக்க அக்கறை காட்டுவதில்லை.அந்தவகையில் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையை அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் ஸ்கூலில் ஒரு பாரம்பரிய விழாவாகவே கொண்டாடினர்.

பள்ளிலேயே ஒரு கிராம மாதிரி உருவாக்கி குடிசைகள் , உழவு கருவிகள், அடுப்பு மற்றும்
அந்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தி பொங்கல் வைக்கும்
முறைகளை மாணவர்களுக்கு கற்று கொடுத்தனர். மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து அசத்தினர். கிராமத்து கோயில்கள், கிணறு, தண்ணீர் இறைக்கும் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன.

இதோடு பாரம்பரிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, திணை உட்பட சத்தான பயிர்களும் காட்சிக்கு வைக்கப்படிருந்தன.மாணவர்கள் மானாட்டம், மயிலாட்டம், கரகம், உருமியாட்டம், தப்பாட்டம், காவடி உட்பட பல நடனங்களை ஆடி தங்கள் பெற்றோர்களை மகிழ்வித்தனர்.

உற்சாகத்தில் திளைத்த மாணவர்களின் 'பீட்பேக்' இதோ:
பாரம்பரியத்தால் வியந்தேன்

பள்ளியில் நடந்த பாரம்பரிய பொங்கல் முறைகளை கண்டு வியந்தேன். தமிழர்களின்
பண்பாட்டை தெரிந்து கொண்டேன். அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய விவசாய கருவிகள், உரல், ஆட்டுக்கல் பற்றி அறிந்தேன். நல்ல பயனுள்ள பொங்கல் நிகழ்ச்சியாக இருந்தது.

- ஸ்வேதா லட்சுமி, மாணவி 10ம் வகுப்பு
சந்தோஷம் தந்த விழா

பாரம்பரிய சேலை கட்டி பொங்கல் கொண்டாடுவது சந்தோஷமாக இருந்தது. இப்படியொரு நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. கிணற்றில் தண்ணீர் எடுக்கும் முறையையும் கற்று கொண்டேன். பலவித விவசாய கருவிகளை பார்த்து வியந்து போனேன்.

- பாரதி, மாணவி, 7ம் வகுப்பு
மனதிற்கு நிறைவாக இருந்தது

பொங்கல் என்றாலே வீட்டில் செய்யும் பொங்கலை சாப்பிட்டு நல்ல சினிமா பார்ப்பது தான் நினைவுக்கு வரும். பள்ளியில் நடந்த பொங்கல் நிகழ்ச்சிகளை பார்த்ததும் மனதிற்கு நிறைவாக இருந்தது. தமிழர்களின் பண்பாடுகளை விளக்கும் பொங்கல் பண்டிகையை பராம்பரியத்துடன் கொண்டாட வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

- அஸ்வின், மாணவன், 9ம் வகுப்பு.
இதுவரை பார்த்தது இல்லை

விதவிதமான கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல், நடன நிகழ்ச்சிகளை தெரிந்து கொண்டேன். இதுவரை
இதுபோன்று பார்த்தது இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி.

- அபிநயா, மாணவி, 8ம் வகுப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X