பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதியை குப்பையாக்குவதா! மாநகராட்சி திட்டத்துக்கு தி.மு.க., எதிர்ப்பு

Added : ஜன 12, 2020
Advertisement

கோவை:'குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்தை, அதிகமான மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கட்டக்கூடாது' என கூறி, தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவை மாநகராட்சி, 57வது வார்டு, மசக்காளிபாளையம், ஜி.வி.ரெசிடென்சி முன், ஆர்.டி.ஓ., பயிற்சி மைதானம் சந்திப்பில், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
இதை கண்டித்து, தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எம்.எல்.ஏ., கார்த்திக் கூறுகையில், ''குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. அதை, மைதானங்களிலும், பூங்காக்களிலும், சிறுவர் விளையாட்டு திடலிலும் அமைக்கின்றனர். தற்போது, 40 அடி திட்டச்சாலையை ஆக்கிரமித்து கட்டுகிறது.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிர்வாகமே, விதிமீறுவது எவ்விதத்தில் நியாயம்?''இதேபோல், பெரியார் நகர், அன்னை இந்திரா நகர், பாரதி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் வசிப்போரும், குப்பை மேலாண்மை மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் போராட்டத்தை, போலீசார் நசுக்க பார்க்கின்றனர். குப்பை மையம் கட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், மாநகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X