பொது செய்தி

தமிழ்நாடு

லைப் அண்ட் ஸ்டைல்

Added : ஜன 12, 2020
Advertisement

பொங்கல் இசை விழாகோவை பாரதிய வித்யா பவன் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, இசை விழா நடத்தப்படுகிறது. இதில், பிரபல கர்னாடக இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சியும் இடம் பெறும். இந்தாண்டுக்கான விழா, ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் வளாகத்தில், இன்று காலை, 9:30 மணிக்கு, தியாகராஜ ஆராதனையுடன் துவங்குகிறது. மாலை, 5:15 மணிக்கு, திருத்தணியை சேர்ந்த கலைமாமணி சுவாமிநாதனுக்கு, 'சங்கீத் சாம்ராட்' விருது, கோவையை சேர்ந்த ரகுநாத்துக்கு, 'கோவை சுப்ரி முருக கான' விருது வழங்கப்படுகிறது. மாலை, 6:15 மணிக்கு, இசை வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.கோவை பஜார் கண்காட்சிபீளமேடு, சுகுணா திருமண மண்டபத்தில் 'கோவை பஜார்', வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர், கார்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என, 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையிடலாம்.ஓவியம் கற்போம்ஒரு நொடி ரசிப்பில், புதுமை உலகில் லயிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவை ஓவியங்கள். ரசிகனில்லை, இனி நீங்களும் படைப்பாளர்கள். துவக்க நிலை கற்பவர்களுக்காக, 'சார்கோல் ஓவியங்கள்' குறித்து ஒருநாள் பயிலரங்கு, கோவை ஆர்.எஸ்.புரத்தில், காலை, 11:00 முதல் மதியம், 2:00 மணி வரை பயிற்சி நடக்கிறது. விவரங்களுக்கு, 97894 09422குழந்தை இயேசு தேர்பவனிகோவைபுதுாரில் உள்ள அற்புத குழந்தை இயேசு சர்ச் தேர்த்திருவிழா இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. கோவையில் பிரசித்தி பெற்ற சர்ச்களில் ஒன்றான இச்சர்ச்சில், தேர்த்திருவிழா, கடந்த, 2ல் துவங்கியது. இன்று காலை, 6:00 மணிக்கு, திருத்தல குருக்களின் திருப்பலி, 8:00 மணிக்கு, திருவிழா சிறப்பு திருப்பலி, மாலை, 5:30 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை இயேசு பவனி வருகிறார்.இனியொரு விதி செய்வோம்சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள, கவையன்புத்துார் தமிழ் சங்கம் சார்பில், மாதம் ஒரு முறை கவியரங்கம், சிறப்புரை, சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மாதத்துக்கான நிகழ்வாக, 'இனியொரு விதி செய்வோம்... யாரை நம்பி?' என்ற பட்டிமன்றம் நடக்கிறது. 'இளைஞர்களை நம்பி' என்ற தலைப்பில் ஒரு அணி, 'முதியவர்களை நம்பி' என்ற தலைப்பில் ஒரு அணி பேசுகின்றனர். கற்பகம் பல்கலை இயற்பியல் துறை தலைவர் சிவசெந்தில் நடுவராக இருந்து தீர்ப்பளிக்கிறார். இந்நிகழ்வு, சர்க்கார் சாமக்குளம், தேவம்பாளையத்தில் உள்ள, விவேகானந்தா மேலாண்மை கல்லுாரி வளாகத்தில், இன்று, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X