பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் 'லேட்'; தேர்தல் ஒத்திவைப்பு: நாச்சிபாளையம் ஊராட்சியில் பரபர

Added : ஜன 12, 2020
Advertisement

போத்தனுார்:மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட, நாச்சிபாளையம் ஊராட்சி துணை தலைவர் தேர்தல், உறுப்பினர்கள் வருகை தாமதம் என கூறி, ஒத்திவைக்கப்பட்டது.மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில், தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல், கடந்த, 27ல் நடந்தது. பா.ஜ.,வை சேர்ந்த சசிபிரியா தலைவராக வெற்றி பெற்றார். ஒன்பது வார்டுகளுக்கு மோகன்ராஜ், சோலையம்மாள், தீபா, பத்ரான், ராமாத்தாள், வேலுசாமி, நந்தகுமார், வாலண்டினா மற்றும் சரண்யா ஆகியோர் வெற்றி பெற்றனர்.நேற்று, துணை தலைவர் தேர்தல் காலை, 11:00 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தலைவர் சசிபிரியா மற்றும் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சோலையம்மாள், நந்தகுமார் மற்றும் சரண்யா ஆகியோர் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தனர். உறுப்பினர் தீபா, 20 நிமிடம் தாமதமாக வந்தார். அதனால், 'உறுப்பினர் தாமதமாக வந்ததால், தேர்தல் நடத்த முடியாது' என கூறி, தீர்மான புத்தகத்தில், ஊராட்சி செயலர் பதிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு, சசிபிரியா மற்றும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு வாரத்துக்குள் மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.ஊராட்சி தலைவர் 'ஆப்சென்ட்'தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், 10 ஊராட் சிகளில் துணை தலைவர் தேர்தல், நேற்று நடந்தது. பேரூர் செட்டிபாளையம், மாதம்பட்டி, தீத்திபாளையம், தென்னம்மநல்லுார், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகிர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டணம் ஆகிய ஊராட்சிகளுக்கு துணை தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.நரசீபுரம் ஊராட்சியில் துணை தலைவரை தேர்வு செய்வதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காத்திருந்திருந்தனர். மொத்தமுள்ள, 9 வார்டு உறுப்பினர்களில், மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர்; ஊராட்சி தலைவரும் வரவில்லை. போதிய கோரம் இல்லாததால், துணை தலைவர் தேர்தல் மறுதேதி குறிப் பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X