பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே இடத்தில் இசையும் உணவும்! இன்றே கடைசி நாள்; மிஸ் பண்ணிடாதீங்க

Added : ஜன 12, 2020
Advertisement
 ஒரே இடத்தில் இசையும் உணவும்! இன்றே கடைசி நாள்; மிஸ் பண்ணிடாதீங்க

கோவை:கோவை, கொடிசியா அருகே உள்ள மைதானத்தில், கடந்த இரு நாட்களாக நடந்து வரும் 'மெகா உணவு திருவிழா' இன்றுடன் நிறைவு பெறுகிறது; பல்சுவை உணவை ருசித்தும், இசைக்கச்சேரியை ரசித்தும் மகிழலாம்.கோவை விழா - 2020ன் ஒரு பகுதியாக, கோவை, கொடிசியா ரோட்டில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், நேற்று முன்தினம் (10ம் தேதி) துவங்கிய 'மெகா உணவு திருவிழா' இன்று நிறைவடைகிறது. ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடக்கும் இவ்விழாவில், ஒரே இடத்தில், 3,000க்கும் அதிகமான உணவு வகைகளை ருசித்து மகிழலாம்.பிரபல உணவு தயாரிப்பு நிறுவனங்களின், 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், சைவம், அசைவம் உணவு வகைகள், உணவு பிரியர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. உணவு மட்டுமின்றி மணமணக்கும் நொறுக்கு தீனி வகைகள், மில்க் ஷேக், ஐஸ்கிரீம், குலோப்ஜாமூன் உள்ளிட்ட ரகங்களும் சுவை படைக்கின்றன.நுழைவு கட்டணம், 120 ரூபாய்; 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். உணவு பிரியர்கள் ருசித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், இசை மழையில் நனைந்திடும் விதமாக, இசை கலைஞர்களின் கச்சேரியும் இடம்பெறுகிறது.நேற்று மாலை அனுராதா ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி வெகுவாக கவர்ந்தது. இன்று, திவாகர் மற்றும் குழுவினர் இசை மழை பொழிய உள்ளனர். விடுமுறையை கொண்டாட நினைப்பவர்கள், இன்று மாலை, 5:00 முதல் இரவு, 11:00 மணி வரை நடக்கும் மெகா உணவு திருவிழாவில் பங்கேற்று 'டின்னர்' முடித்து விட்டு, மனநிறைவுடன் வீடு திரும்ப இதுவோர் நல்ல வாய்ப்பு.கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவக்குமார் கூறுகையில்,''உணவு திருவிழாவில், அனைத்து ஸ்டால்களிலும் விதவிதமாக உணவு வகைகள் விருந்து படைத்து வருகின்றன. முதல் நாள், 8,000 பேர் 'விசிட்' அடித்தனர். நாளை (இன்று), 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் உணவு ரகங்கள் ஸ்டால்களில் கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X