பொது செய்தி

தமிழ்நாடு

இங்கே, ஒரு ஓவியம் பேசுகிறது!

Added : ஜன 12, 2020
Advertisement
 இங்கே, ஒரு ஓவியம் பேசுகிறது!

கோவை:ஒரு புகைப்படம் ஓவியம்போல் காட்சி அளிக்கலாம். ஒரு போதும் புகைப்படம் ஓவியமாகாது. நம் தொன்மையான கலைகளில், ஓவிய கலை தனித்துவமான அழகியல் தன்மை கொண்டது. ஓவியர்கள் தங்கள் மனக்கண்ணில் தரிசிக்கும் அரூபமான பிம்பத்தை கோடுகளாகவும், வண்ணங்களாகவும் சித்திரமாக்குகின்றனர்.ஆதி மனிதன் பாறைகளில் தீட்டிய ஓவியங்கள், குகை ஓவியங்களாக பரிணாமம் பெற்று, ஆலயங்களில் கடவுளின் அவதாரங்களாக அது தெய்வீக தன்மையை அடைந்தது. ஓவியக்கலையை பொறுத்தவரை காலம்தோறும், சமூக மாற்றத்துக்கு ஏற்ப, புதிய பரிணாமங்களை அடைந்துள்ளன. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலத்தில், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற புதிய கருத்தியல் கலை கோட்பாடுகள் ஓவியக்கலையில் அதிகம் பிரதிபலித்தன.பாப்லோ பிக்காசோ வருகைக்கு பின், ஓவியக்கலை அதிநவீன உருவ மாற்றங்களை பெற்றன. கோடுகளும், வண்ணங்களும் குறியீடுகளாக மாறின. இன்றைக்கு நவீன ஓவியக்கலையில், உலகம் முழுவதும் பிக்காசோவின் தாக்கம் வெளிப்படுகின்றன.கோவையில் நேற்று நடந்த ஓவிய சந்தையில், பல நவீன கலை வடிவம் கொண்ட ஓவியங்களை பார்க்க முடிந்தது. ரேஸ்கோர்ஸ், ஸ்கீம் ரோட்டில் ஓவிய சந்தை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.கேரளா, பெங்களூரு, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த ஓவியர்கள் வரைந்த, அப்ஸ்ட்ராக் பெயின்டிங், அக்ரலிக் பெயின்டிங், ஆயில் பெயின்டிங் மற்றும் வாட்டர் கலர் பெயின்டிங்குகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஓவிய சந்தையை பார்த்து ரசித்தனர். பலர், தங்களுக்கு பிடித்த ஓவியங்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X