பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா செல்ல மாணவர்கள் 'ரெடி'

Added : ஜன 12, 2020
Advertisement
 அமெரிக்கா செல்ல மாணவர்கள் 'ரெடி'

கோவை:'தினமலர்' நடத்தி வரும் மெகா வினாடி வினா போட்டியில், கோவை பள்ளிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன.'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி, கோவை மாவட்ட பள்ளிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் நேற்று போட்டி நடந்தது. தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 275 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.அதில், தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'எப்' அணியை சேர்ந்த நிதின், வருண் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சாந்தகுமாரி பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியை, பள்ளி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், ராசு, தீபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.விவேகானந்தா வித்யாலயா பள்ளிஆவாரம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 110 பேர் பங்கேற்றனர். 'ஹெச்' அணியை சேர்ந்த மேகா, ரிதன்யா வெற்றி பெற்றனர். பள்ளி தாளாளர் நடராஜன் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியை, தலைமையாசிரியர் பெரியசாமி, துணை தலைமை ஆசிரியை சரளா மற்றும் ஆசிரியை பத்மாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X