வி.எல்.பி.,யில் கோவை விழா

Added : ஜன 12, 2020
Advertisement

கோவைப்புதுார் வி.எல்.பி., ஜனாகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி தொழில்முனைவோர் கிளப் சார்பில், மாணவர்கள் பங்கேற்றதொழில்முனைவோர் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பலதரப்பட்ட நகைகள், உணவுகள் மற்றும் ஆடைகள், மெஹந்தி, எழுதுபொருட்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. போதை மற்றும் பாலியல் கொடுமை, தற்கொலை தவிர்ப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லுாரி முதல்வர் சண்முகசுந்தரம், துணை முதல்வர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.குழந்தைகள் விழா கொண்டாட்டம்மணியகாரன்பாளையம், சி.எம்.எஸ்., வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் விழா நடந்தது; இணை செயலாளர் பிரசாத் வரவேற்றார்.தனித்திறன் போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வகுப்பு வாரியாக மாணவர்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.கோயமுத்துார் மலையாளி சமாஜத்தின் தலைவர் ராஜகோபாலன் பேசுகையில்,''குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே. தனித்திறன்களுடன் வளரும் குழந்தைகளால், எதிர்கால கனவுகளை திட்டமிட முடியும். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும், மாணவர்கள் பங்கேற்க வேண்டும். எல்லா திறமைகளையும் வெளிப்படுத்தக்கூடிய அடித்தளமாக பள்ளி மட்டுமே செயல்படுகிறது,'' என்றார்.பொது செயலாளர் விஜயக்குமார், பள்ளி தலைவர் வேணுகோபால், செயலாளர் முரளி, முதல்வர் கீதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.திருக்குறள் சொற்பொழிவுகற்பகம் பல்கலை தமிழ் மன்றம் சார்பில், திருவள்ளுவர் அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது. துணைவேந்தர் சுடலைமுத்து தலைமை வகித்தார். சொற்பொழிவாளர் அன்பு சிசு மணியன் பேசுகையில்,''தமிழர்களாகிய நாம் உணர்ந்து போற்ற வேண்டிய அரிய பொக்கிஷம் திருக்குறள். அன்புடைமை, அறிவுடைமை போன்ற அதிகாரங்களை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். இன்றைய அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு பிரச்னைகளை கையாளவும், திருக்குறளில் வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன,'' என்றார்.தமிழ் துறை தலைவர் தமிழரசி வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X